Breaking News

சின்னச் சின்ன ஆசை, செத்துப்பார்க்க ஆசையாம் !!!

பிரெசில் நாட்டில் திருமணமான ஒரு பெண் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தது போல் சவப்பெட்டியில் படுத்து கொண்டு போலியான இறுதி சடங்கு நிகழ்ச்சியை நடத்தி காட்டியுள்ளார்.

பிரேசில் நாட்டை சேர்ந்த Vera Lucia da Silva (44) என்ற பெண் தனது கணவருடன் வசித்து வருகிறார்.

இவருக்கு பல வருடங்களாகவே ஒரு விசித்திரமான ஆசை இருந்து வந்தது. அது என்னவென்றால் தான் உயிருடன் இருக்கும் போதே இறந்தவர்களுக்கு நடக்கும் இறுதி சடங்கு நிகழ்ச்சி போன்று தானும் இறந்தவர் போல சவப்பெட்டியில் படுத்து கொள்ள வேண்டும் என்பது தான் அவருடைய ஆசை.