Breaking News

பட்ஜட்டுக்கு முன்பதாகவே திடீரென விலை குறைக்கப்பட்ட சிறிய ரக கார்கள் !!!

பட்ஜட்டுக்கு வெளியிடப்பட முன்பதாகவே சிறியரக கார்களுக்கு ரூபா 2 லட்சம்  வரையான விலைக்கழிவு வழங்கப்பட்டுள்ளது. குறித்த விலைக்கழிவானது Suzuki கார்களுக்கு 2 லட்சம் ரூபாவும் Panda கார்களுக்கு ஒரு லட்சமுமாக குறைக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.

பட்ஜட்டுக்கு முன்னராகவே இவ்வாறான கவர்ச்சியான  விலைக்கழிவுகள் வழங்கப்பட்டுள்ளமையும்  வெளிவரவுள்ள பட்ஜட் மக்களுக்கான பட்ஜட் என பலராலும் தெரிவிக்கப்பட்டதாலும் விளிவரவிருக்கும் குறித்த  பட்ஜட்டின் மீதான மக்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.