Breaking News

70 வருடங்களுக்கு ஒருமுறை வானில் தோன்றும் அதிசயம் எதிர்வரும் வரும் 14ஆம் தேதி இரவு வானில் !!!

வரும் 14 ஆம் தேதி வானில் தெரியும் நிலவு சாதாரண பவுர்ணமி நிலவை விட 30 மடங்கு அதிக வெளிச்சத்துடன் தோன்றும் என நாசா கூறியுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், வரும் 14 ஆம் தேதி வானில் சூப்பர் மூன் தோன்ற உள்ளதாக தெரிவித்துள்ளது. சூப்பர் மூன் என்றால் நிலவு பூமிக்கு மிக அருகில் அதிக வெளிச்சத்துடன் மிகப் பெரியதாக தோற்றமளிக்கும்.

இந்த சூப்பர் மூன், பூமியில் இருந்து சுமார் 3 லட்சத்து 84 ஆயிரத்து 400 கிலோ மீட்டர் தொலைவில் சுற்றி வரும்.

இந்த சமயத்தில் நிலவு நீள்வட்ட பாதையில் சுற்றாமல் பூமிக்கு மிக அருகில் வந்து செல்லும். இந்த நிகழ்வு தான் வருகிற 14 ஆம் தேதி நிகழ உள்ளது.

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த நிகழ்வு கடந்த 1948-ம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்தது.

இந்த ‘சூப்பர் மூன்’ எந்த அளவு தெளிவாகவும், பெரிதாகவும் இருக்கும் என்பதை நாசா ஆராய்ச்சி மையம் படமாக வெளியிட்டுள்ளது.