கிழக்கு மாகாணத்திற்கான நிர்மாண அபிவிருத்தி இணையம் உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு
கனேடிய உலகப் பல்கலைக்கழக சேவை அனுசரனையில் கிழக்கு மாகாணத்திற்கான நிர்மாண அபிவிருத்தி இணையம் இன்று உத்தியோக பூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இன்று (24) திருகோணமலை ஜேகப் பார்க் விடுதியில் நடைபெற்றது ..
இந்நிகழ்வுக்கு விசேட அதிதிகளாக கிழக்கு மாகாண முதல் அமைச்சர் இசட் .எ . நசீர் ஆகமட் ,உலகப் பல்கலைக்கழக சேவை கனடா அமைப்பின் இலங்கைக்கான நாட்டு பணிப்பாளர் எஸ்தர் மக்கின்டொச், தேசிய கட்டிட நிர்மாண துறை செயலாளர் புகுது கமல் பெரேரா ,கிழக்கு மாகாண கட்டிட நிர்மாண அபிவிருத்தி இணையத்தின் தலைவர் .ரஞ்சிதமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு கிழக்கு மாகாணத்திற்கான நிர்மாண அபிவிருத்தி இணையத்தினை திரைநீக்கம் செய்து ஆரம்பித்து வைத்தனர்
இந்த அங்குரார்பன நிகழ்வில் கிழக்குமாகாண பொறுப்பாளர் ,யோகேஸ்வரன் ,பிராந்திய சிரேஷ்ட நிகழ்சி திட்ட உத்தியோகத்தர் ஜெயக்குமார் ,,மட்டக்களப்பு அம்பாரை மற்றும் திருகோணமலை சர்வோதய அங்கத்தவர்கள் மாவட்ட கட்டிட நிர்மாண துறை அங்கத்தவர்கள் ,அரச திணைக்கள உத்தியோகத்தர்கள் தனியார் மற்றும் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்
(லியோன்)