Breaking News

கிழக்கு மாகாண ஆசிரியர்கள் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களை தெரிவு செய்யும் கூட்டம்.

கிழக்கு  மாகாண ஆசிரியர்கள் ஒன்றியத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

கிழக்கு மாகாணத்தில் இருந்து வெளிமாகானத்தில் சேவை செய்யும் தமிழ், முஸ்லிம் ஆசிரியர்களின் பரிந்துரைக்கு அமைவாக ஆறு அம்சங்கள் கொண்ட பரிந்துரைகளுடன் வெளிமாகாண ஆசிரியர்களின் ஒன்றியத்தின்  நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டம் 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் நடைபெற்றது.

இந்த ஆசிரியர்கள் ஒன்றிய கூட்டத்தில்  கிழக்குமாகாணத்தில் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் செயற்பாட்டின் நோக்கமாக  ஆறு பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்தல்.

ஆசிரியர்களுக்கு அநீதி ஏற்படும் போது நியாயத்தைப் பெற்றுக் கொடுத்தல்.

வெளிமாகாண பாடசாலைகளில் சேவைக்காலம் நிறைவுற்றது சொந்த மாவட்டத்தில் கடமையாற்ற  கிழக்கு மாகாண அரசாங்கம் அங்கீகரித்தலை உறுதிப்படுத்தல்.

ஆசிரியர் சேவையில் புதிய ஆசிரியர்களை ஆட்சேர்ப்புச் செய்யும் போது வெளிமாகானத்தில் ஆசிரியர் சேவையில் உள்ளவர்களின் தரம் ,வகை என்பவற்றை கருத்தில் கொள்ள வைத்தலை உறுதிப்படுத்தல்.

எதிர் காலத்தில் ஆசிரிய சேவையில்  இனைத்துக்கொள்ளும் போது கட்டம் கட்டமாக வெளி மாகாணத்திலிருந்து சொந்த மாவட்டத்திற்கு ஆசிரியர்களை விடுவிப்புக்களை செய்யும் போது அவ்வாசிரியர்களை ஏற்றுக் கொள்வதை வலியுறுத்தல்.

கிழக்கு மாகாண அரசாங்கம் எச்சந்தர்ப்பத்திலும் வெளிமாகாண ஆசிரியர்களை சொந்த மாவட்டத்தில் சேவை செய்வதற்கு அனுமதிப்பதையும் ஆட்சேர்ப்பு மேற்கொள்ளும் போது கருத்தில் கொள்வதையும் உறுதிப்படுத்தல்.

போன்ற விடயங்களை முன்வைக்கப்பட்டு ஆசிரியர்கள் ஒன்றிய நிர்வாக குழு உறுப்பினர்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன்போது ஆசிரியர்கள் ஒன்றியத்தில் தலைவர், செயலாளர், பொதுச்செயலாளர், பொருளாளர், உபசெயலாளர், உபதலைவர், இனைப்பாளர்கள், 14 பேர் கொண்ட உறுப்பினர்கள் என தெரிவு செய்யப்பட்டு முன்வைக்கப்பட்ட ஆறு அம்ச பரிந்துரைகள் ஆரம்ப கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.

இந்த ஆரம்ப நிர்வாக குழு உறுப்பினர்கள் தெரிவு செய்யும் கூட்டத்தில் கிழக்கு மாகாணத்தில் இருந்து வடமத்திய, மேல்மாகாணம், ஊவா, சப்ரகமுவ, தென்மாகாணம், மத்திய, வடமாகாணங்களில் சேவை செய்யும் கிழக்குமாகாண தமிழ், முஸ்லிம் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
(லியோன்)