Breaking News

மனிதாபிமானம் , மனிதத்துவம் இன்று இந்த உலகத்திலே தொலைந்து போயிருக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது

(லியோன்)

இன்று பணம் இருந்தால் உலகத்திலே எதையும் வாங்கலாம் ,ஆனால்   மனிதாபிமானம் , மனிதத்துவம் என்ற ஒரு விடயத்தை பணத்தால் வாங்க முடியாது .அந்த ஒரு விடயம் தான்  இன்று இந்த உலகத்திலே தொலைந்து போயிருக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது என  மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ் தெரிவித்தார் 
.

மட்டக்களப்பு மாவட்ட செயலக உத்தியோகத்தர்களின்  ஏற்பாட்டில் 2016ஆம் ஆண்டுக்கான வருடாந்த ஒளிவிழா நிகழ்வு 20 .12.2016  செவ்வாய்கிழமை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இந்த ஒளிவிழா  நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் . சாள்ஸ்  உரையாற்றும் போது  இவ்வாறு தெரிவித்தார்  .

 ஒளிவிழா என்பது உண்மையாக கிறிஸ்மஸ் காலங்களில் அனைவராலும் கூறப்படுகின்ற அந்த வார்த்தையின் அர்த்தம் பலவகையாக வருடம் தோறும் ,மாதம் தோறும் ,நாள்தோறும் சொல்லப்பட்டாலும் இந்த சமூகங்களுக்கிடையே இருக்கின்ற உளரீதியான பிரச்சினைகளும் ,சமூக ரீதியான பிரச்சினைகளும் இதுவரை தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது .

அகதிகள்  நாடு நாடாக தங்களுடைய  இடங்களை விட்டு செல்வதும் ,சமூகங்களுக்கிடையே ஏற்படுகின்ற பிரச்சினைகளும் ,பகைமைகளும் ஒருவரை ஒருவர் ஏற்றுக்கொள்ளாத தன்மைகளும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன .

இந்த நிலையிலே  தான் ஒவ்வொரு வருடமும் நாங்கள் இயேசுவுடைய பிறப்பை மிக சிறப்பாக , விமர்சையாக கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம் .

ஆனால் இது ஒரு சம்பிரதாய பூர்வமான  நிகழ்வாக இந்த சமூகத்திலே மாறிக்கொண்டு இருப்பதுதான் உண்மையாக வேதனைக்குரிய விடயம் .

அதாவது இயேசு எதற்காக பிறந்தார் ,எதற்காக இந்த உலகத்திலே வாழ்ந்தார் , அவர் ஏற்படுத்த விரும்பிய மாற்றம் என்ன ,அந்த மாற்றத்தின் ஊடாக தான் இந்த சமூகம் , மனித இனம் வாழவேண்டும் என்பதற்காக தன்வாழ்வை அர்பணித்து கொண்டார் .

அதனுடைய அர்த்தங்கள் எல்லாம் இன்று மறந்து போகின்ற  விடயமாக ,மறைந்து போகின்ற விடயமாக பார்க்கின்றோம் .

இன்று பணம் இருந்தால் உலகத்திலே எதையும் வாங்கலாம் ,ஆனால் அதே நேரத்திலே மனிதாபிமானம் , மனிதத்துவம் என்ற ஒரு விடயத்தை பணத்தால் வாங்க முடியாது .

அந்த ஒரு விடயம் தான் இந்த உலகத்திலே தொலைந்து போயிருக்கின்ற ஒரு விடயமாக காணப்படுகின்றது .


அந்த மனிதாபிமானம் , மனிதத்துவம் , மனிதமான்பு என்கின்ற ஒரு விடயத்தை என்று நாங்கள் புரிந்து கொள்கின்றோமோ , ஏற்றுக் கொள்கின்றோமோ அன்றுதான் இந்த கிறிஸ்துவின் பிறப்பும் , கிறிஸ்துவின் இறப்பும் ,உயிர்ப்பும் அர்த்த முள்ளதாக இருக்கும் என தெரிவித்துக்கொண்டார் .