Breaking News

கிழக்கு மாகாணகாண சபையில் வரவு செலவுத்திட்ட வாக்கெடுப்பு 17 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்.!

முதலமைச்சரின் கீழுள்ள 13 திணைக்களுங்களுக்கான வாக்கெடுப்பு நடைபெற்ற போது  ஆதரவாக 25வாக்குகள் கிடைக்கப் பெற்று பெரும்பான்மை வாக்குகளால்  வெற்றி பெற்றது

ஏனைய ஆண்டுகளில்   ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவை தாண்டாத நிதியொதுக்கீடுகளை கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டின் அயராத முயற்சியினால் 3000 மில்லியனுக்கு அதிக நிதியை இந்த ஆண்டு முதலமைச்சர்  மாகாணத்துக்கு கொண்டு வந்திருந்தமை சபையில் பலரது வரவேற்பை பெற்றது.

இம்முறை 2017 ஆம் ஆண்டு  1800 மில்லியன் ரூபாவே கிடைக்கப்  பெற்றுள்ள நிலையில்  அதனை அதிகரித்துப் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் முன்னெடுத்துவருவதாகவும் கிழக்கு மாகாண முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மத்திய அரசாங்கத்தின் அமைச்சுக்களுக்கு ஊடாக கிழக்கு மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட  நிதிகளை மாகாணத்துக்குள் முழுமையாக கொண்டுவருவதற்கான சகல நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருவதாக அவர் சபையில் தெரிவித்த போது  சபை உறுப்பினர்கள் மேசைகளை தட்டியவாறு தமது  ஆதரவை  தெரிவித்திருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.