மட்டு. கட்டடங்கள் திணைக்கள உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பும் மரநடுகையும் !

இன்று(26) மட்டு. கட்டடங்கள் திணைக்கள பிரதம எந்திரி அ.சுரேஸ்குமார் தமையிலும் அனைத்து உத்தியோகத்தர்களினதும் பங்களிப்புடன் முன்னெடுக்கப்பட்ட சிரமதானத்துடன்கூடிய மரநடுகையில் டெங்கு நுளம்புகள் பரக்கூடிய வகையில் காணப்பட்ட இடங்கள் சுத்தம் செய்யப்பட்டதுடன் திணைக்களத்தின் வெளிப்புற மதிலுக்கு அருகில் குப்பைகள் கொட்டப்படுவதை தடுக்கும் வகையில் வீதிக்கு அருகாமையில் அழகிய பூமரக்கன்றுகழும் நடப்பட்டன.
மேலும் அதி. மேதகு ஜனாதிபதி அவர்களால் நடைமுறைப்படுத்தப்பட்ட "நஞ்சற்ற சூழலை உருவாக்குவோம்" திட்டத்தினையொட்டி பிரதம எந்திரி உட்பட உத்தியோகத்தர்களால் கிளசறியா மரத்துண்டங்களும் நடப்பட்டமை சிறப்பம்சமாகும்.












