Breaking News

இந்த பெண்ணுக்குத்தான் உலகிலேயே மிகப்பெரிய....!

உலகிலேயே உயரமான பெண் வேறொருவராக இருந்தாலும் உலகிலேயே மிக நீளமான கால்களை உடைய பெண் இவர்தான் என்ற சாதனையை 39 வயது கரோலின் ஆர்தர் என்பவர் பெற்றுள்ளார். இவருடைய கால்களின் நீளம் மட்டும் 51.5 இன்ச் என்பது குறிப்பிடத்தக்கது அதாவது சுமார் 4.25 அடி ஆகும். இந்த சாதனை தற்போது கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.

6 அடி 2 இன்ச் உயரமுள்ள கரோலின் கணவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வாழ்ந்து வருகிறார். முன்னாள் மாடல் அழகியான இவருக்கு ஹாலிவுட் வாய்ப்புகள் பல தேடி வந்ததாம். ஆனால் அவற்றை தவிர்த்துவிட்டு குழந்தைகளின் நலனில் அக்கறை எடுத்து வருகிறார்.