Breaking News

புனர்நிர்மாணம் செய்யப்பட திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் திறந்து வைக்கப்பட்டது

புனர்நிர்மாணம் செய்யப்பட மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயம் (21) செவ்வாய்கிழமை திறந்து வைக்கப்பட்டது .

மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட மட்டக்களப்பு திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தில் பலவருட காலமாக பழமை வாய்ந்து காணப்பட்ட பாடசாலை கட்டமைப்புக்களின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் பாடசாலை அதிபரினால் மட்டக்களப்பு விமானப்படை அதிகாரிகளுக்கு  விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு விமானப்படையினரின்  சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் பாடசாலை புனர்நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது  

இதன் கீழ் பாடசாலைக்கான பிரதான முன்பக்க மதில் ,விளையாட்டு முற்றம் , அதிபர் அலுவலகம் , வகுப்பறை கட்டிடங்கள் , ஆலோசனை வழிகாட்டல் அறை, மலசல கூடங்கள் ,தளபாடங்கள் , குடிநீர் வசதி ,வகுப்பறைகளுக்கான மின்சார வசதி , பாடசாலைக்கான சுற்றுவேலி போன்ற பாடசாலைக்கான அனைத்துக்கட்டமைப்புக்களும் விமானப்படியினரால் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு பாடசாலை மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது .

புனர்நிர்மாணம் செய்யப்பட திருப்பெருந்துறை ஸ்ரீ முருகன் வித்தியாலயத்தினை இலங்கை விமானப்படையின் 66வது ஆண்டு நிறைவினை சிறப்பிக்கும் வகையில் மட்டக்களப்பு விமானப்படையினரால் திறந்து வைக்கப்பட்டதுடன் பாடசாலை வளாகத்தில் மரக்கன்றுகளும் நாட்டப்பட்டது . 

இந்த நிகழ்வின் போது புனர்நிர்மான பணிகளை மேற்கொண்ட மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரியை பாடசாலை சமூகத்தினரால் கௌரவிக்கப்பட்டு நினைவு பரிசில்களும் வழங்கப்பட்டது .
 இந்நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி .பி எஸ் .எம் .சாள்ஸ் , கௌரவ அதிதிகளா மட்டக்களப்பு விமானப்படை கட்டளை அதிகாரி வின் கொமாண்டர் புத்திக்க பியஸ்ரீ , மண்முனை வடக்கு கோட்டக்கல்விப் பணிப்பாளர் எ .சுகுமாரன் மற்றும் இந்நிகழ்வில் விமானப்படை அதிகாரிகள் , திருப்பெருந்துறை ,கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் , பாடசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள் . ஆசிரியர்கள் , மாணவர்கள் ,பெற்றோர்கள் கலந்துகொண்டனர் . (லியோன்)