Breaking News

ஐரோப்பிய முதலீட்டு வங்கி உயர் மட்ட பிரதிநிதிகள் இலங்கை விஜயம் !

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் உயர்மட்ட குழுவினரால் மேற்கொள்ளப்படவுள்ள தெற்காசிய விஜயத்தின் போது இலங்கைக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இவ்விஜயத்தின் போது ஐரோப்பிய முதலீட்டு வங்கியினது இணை அனுசரனையில்  முன்னெடுக்கப்படும் கழிவு நீர் முகாமைத்துவ அபிவிருத்திப் பணிகளை மேற்பார்வையிடுவதுடன்  இலங்கையின் அபிவிருத்திப் பணிகளில் மேலதிக பங்களிப்பை வழங்குவது குறித்தும் ஆராயவுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. .