தேர்தலில் போட்டி உறுதி என விஷால் அறிவிப்பு!
திருச்சி : நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடும் உறுதியில் இருந்து பின்வாங்க போவதில்லை என்று நடிகர் விஷால் உறுதிபட தெரிவித்துள்ளார். திருச்சியில் 10 ஏழை தம்பதிகளுக்கு இலவசமாக திருமணம் செய்து வைத்து சீர் வரிசைகளை வழங்கி பேசிய அவர் இவ்வாறு கூறினார். தென் இந்திய நடிகர் சங்க தேர்தலில் தமது அணி நிட்சயம் வெற்றிபெரும் என்று அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்த விஷால் அரசியல் கட்சிகளை சார்ந்திருக்கும் சரத்குமார், ராதா ரவி ஆகியோர் விஜய்காந்தை போன்று அவர்களாக தங்கள் பொறுப்புகளில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். நாடக நடிகர்களுக்காக மதுரையில் கட்டிடம் தருவோம் என்று கூறிய அவர் தேர்தலை மனதில் வைத்து இதனை செய்யவில்லை என்றார்.



