Breaking News

வீதி ஒழுங்குகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி வேண்டுகோள்

வீதி ஒழுங்குகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தொடர்ந்து அவர் கருத்து வெளியிடுகையில் அண்மைக் காலங்களில் ஏற்பட்;ட மோட்டார் சைக்கிள் விபத்துக்களில் குறிப்பாக காத்தான்குடி, ஏறாவூர் மற்றும் வாழைச்சேனைப் பகுதிகளில் நடைபெற்ற விபத்துக்களில் காயமடைந்தவர்கள் அனைவருக்கும் முக்கியமாக தலைகளிலேயே காயங்கள் ஏற்பட்டுள்ளன. இதற்குக் காரணம் தலைக் கவசம் அணியாமையேயாகும். அனைத்து இடங்களிலும் பொலீஸார் கண்காணிப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் எனினும் எத்தனை பொலிஸாரை கண்காணிப்புக்காக ஈடுபடுத்தினாலும் மோட்டார் சைக்கிளை பயன்படுத்துபவர் தன்னளவில் சரியான முறையில் சிந்தித்துச் செயற்படாதவரை இவ்வாறான விபத்துக்களை தவிர்ப்பது சிரமமானதாகவே அமையும் என தெரிவித்தர்.

காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்கள் சம்மேளனத்திடமும், பிரதேசத்தின் பள்ளிவாயால்கள், கோயில்களிடத்திலும் இது பற்றி அறிவித்துள்ளோம், பாடசாலை மாணவர்களிடமும் இந்த வியங்களை விளக்கியுள்ளளோhம், இவை அனைத்திற்கும் மேலாக வீடு வீடாகச் சென்றும் இந்த விடயங்களை விளக்கியுள்ளோம். மிக முக்கியமாக இளைஞர்கள் தலைக்கவசம் அணிந்தே மோட்டார் சைககிளை செலுத்த வேண்டும் என்பதை வீட்டில் உள்ள அக்காமார், அம்மாமார்; வலியுத்த வேண்டும் என்பதே எமது நோக்கமாகும். 

தற்போதைய காலம் பண்டிகைக் காலமாகும் வேறு பிதேசங்களிலுள்ளோர் தமது வர்த்தக நிலையங்களை மூடிவிட்டு இந்கு வந்து ஒன்றுசேர்வார்கள் வாகனத்தை செலுத்தும்போது வீதி ஓழக்கத்தைப் பேணுவதன் மூலமே வீதி விபத்துக்களைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் ஏ.பி.வெதகெதர சுட்டிக்காட்டினார்.

பிரதான வீதியில் மாத்திரம் தலைக்கவசம் அணிந்தால் போதுமானது, உள்வீதிகளில் அணிய தேவையில்லை என பலர் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். ஏந்தப் பகுதியில் பயணித்தாலும் தலைக்கவம் அணிய வேண்டியது அவசியமாகும். 

போதைவஸ்துப் பாவனை

இது தவிர இப் பிரதேசத்தில் போதைப் பொருள் விற்பனை பயன்பாடு என்பன அதிகரித்துள்ளன. குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் கஞ்சா, அபின் போன்ற போதை வஸ்துகக்களின் பாவனை அதிகரித்துச் செல்வது மிகப் பெரும் பிரச்சிiயாக உருவெடுத்துள்ளது.; மதுபானம் அருந்திவிட்டு வருபவரிமிருந்து வெளிப்படும் வாசனையிலிருந்து அறிந்து கொள்ளலாம் எனினும் தற்போது மணம் இல்லாத புதிய புதிய ரகங்களில் விற்பனை செய்யப்படடுகின்றன தற்போது குளிசைகள் வடிவிலும் விற்பனை செய்யப்படுகின்றன, இது தவிர தலை முடிக்கு பயன்பபடுத்தப்படும் ஹெயா ஜெல்லைக்கூட போதைக்காக உட்கொள்வதாக தெரிய வந்துள்ளது. இவை சம்பந்தமாக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

இளைஞர் கழகங்கள் மற்றும் இளைஞர் அமைப்புக்களிடமும் இது பற்றி பேசயுள்ளோம், விiயாட்டுக்களில் இளைஞர்களை ஈடுபடுத்துவதன் மூலம் போதைப் பொருளுடனான ஈர்ப்பினைக் குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்

போதைப் பொருளுடன் தொடர்புபட்ட பலர் கைது செய்யப்பட்டுள்ளனர், பலர் விளக்க மறியலிலும் உள்ளனர், சிலர் நீதின்றத்தில் ஆஜர் செய்யப்பட்டுள்ளனர். இவை எல்லாவற்றையும் நாம் மேற்கொள்வது போபை; பொருளை இல்லாதொழிக்க வேண்டும் என்பற்காகவேயாகும். 

ஓவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் சிவில் பாதுகாப்புக் குழுக்கள் தாபிக்கப்பட்டு அவை சிறப்பாக இயங்கி வருகின்றன. மாததத்தில் இரு தடவைகள் அதன் கூட்டம் நடைபெற்று வருகின்றது.   

சிறுவர் துஷ்பிரயோகம் 

சிறுவர் துஷ்பியோகம் தொடர்பில் எமக்குக் கிடக்கும் முறைப்பாடுகள் தொடர்பிலேயே நாம் விசாரணைகளை மேற்கொள்கின்றோம். குடும்ப கௌரவம் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ஏராளமான சம்வங்கள் முறைப்படுகளாகாக பதிவு செய்யப்படுவதில்லை. 

தாத்தா, மாமா, பெரியப்பா Nhன்ற அருகில் இருப்போரே துஷ்பிரயோகத்திற்கு காரணமாக அமைகின்றார்கள். பிள்ளை பாடசாலைக்கு செல்லும்போது அவதானமான அனுப்ப வேண்டும் என்பதையும் அதேபோன்று, பிரத்தியேக வகுப்புகளுக்கு பெறறோரே அழைத்துச் செல்ல வேண்டும் என்பதையும் பாடசாலையிலிருந்து பிள்ளை வரத் தாமதமாகுமானால் உடனடியாகத் தேட வேண்டும் எனவும் பிள்ளையினது நேர அட்டவணையை பரீட்சிப்பதோடு குறித்த பாடங்களில் பங்குபற்றுகின்றதா என்பதையும கண்காணிக்க வேண்டுமென பெற்றோருக்கு சிவில் பாதுகாப்புக் குழுக்கள், பாடசாலைகள் மூலம் விழிப்புணர்வினை ஏற்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோம் மற்றும் பஸ் நிலையங்களிலும் தெளிவூட்டல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 

இவ்வாறான குற்றச் செயல்களை நூறு வீதம் கட்டுப்படுத்த முடியாவிட்டாலும் ஐம்பது வீதம அல்லது எண்பது வீதமளவிற்கு கட்டுப்படுத்த முடியுமாயின் அது சிறந்த விடயமாக இருக்கும். 

ஊடகங்களும் இந்த விடயத்தில் உச்ச பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் காத்தான்குடி பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஏ.பி.வெதகெதர தனது வேண்டுகோளில் தெரிவித்தார். 
நமது நிருபர்