தலையின் மச்சினிச்சியின் மேல் கண்வைத்த இயக்குனர் லிங்குசாமி
மழலை பேசிய வயதிலேயே சிறந்த நடிப்புக்காக தேசிய விருதைப் பெற்று, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் ஷாம்லி. அக்கா ஷாலினிக்கே கிடைக்காத கெளரவமும், பெருமையும் பெற்றவர். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்த ஷாம்லி, குமரியானதும் படிப்பில் கவனம் செலுத்தினார். கல்லூரியை தொட்டபோது தெலுங்கு படம் ஒன்றில் கதாநாயகியாக அறிமுகமானவர், அந்தப் படத்துக்குப் பிறகு மீண்டும் படிப்பில் கண்ணும் கருத்துமாக மூழ்கினார். இப்போது மூக்கும் முழியுமாக அவ்வளவு லட்சணமாக அழகாக இருக்கிறார். கடந்த வருடத்துடன் படிப்பை முடித்தவர் ஹீரோயின் இன்னிங்சில் இறங்க ரெடியாகிவிட்டார். இதற்காக பிரத்யேக போட்டோ ஷூட் செய்திருக்கிறார். இவரது போட்டோ ஒன்று லிங்குசாமி கண்ணில் பட ‘சண்டக்கோழி’ பார்ட் டூவுக்கு விஷால் ஜோடியாக நடிக்க ஷாம்லியிடம் கேட்டிருக்கிறாராம். ஷாம்லி சைடிலும் கிரீன் சிக்னல் விழுந்திருப்பதாக சொல்லப்படுகிறது.



