Breaking News

உடல் நலம் பாதித்த பெண்ணுக்கு நிகழ்ந்த அதிசயம்

கடந்த வாரம் இங்கிலாந்து நாட்டின் டெவோன் நகரைச் சேர்ந்தவர் சாரா கோல்வில். 40 வயதான இப்பெண், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அதற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஒரு நாள் காலையில் படுக்கையில் இருந்து எழுந்தபோது, அவரது வட்டார பாணி பேச்சு மறைந்து, அவரது பேச்சு சீன மொழி உச்சரிப்பு போல மாறிவிட்டது. அவரது குரலும் மாறி விட்டது. அவரை நரம்பியல் மருத்துவரிடம் கூட்டிச் சென்றனர். எவ்வளவோ சிகிச்சை அளித்தும் எந்த மாற்றமும் இல்லை. அந்த பாதிப்பு, நிரந்தரமானது என்றும், அதை சரிசெய்ய முடியாது என்றும் டொக்டர் கூறிவிட்டார். இதனால், சாரா மேலும் அதிர்ச்சி அடைந்தார். 

தனது வாழ்க்கையே நரகமாகி விட்டதாக அவர் கண்ணீர் வடித்து வருகிறார். தனது வீடு, வேலை எல்லாவற்றையும் இழந்து விட்டதாகவும் அவர் கூறினார். அவர், சீனாவுக்கு இதுவரை சென்றதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இரண்டாம் உலகப் போரின்போது, விமான குண்டு வீச்சு சிதறல்கள் பட்டதால் மூளை பாதிப்பு அடைந்த நோர்வே பெண் ஒருவர், திடீரென ஜெர்மன் மொழி உச்சரிப்பில் பேசத் தொடங்கி விட்டார். அப்போதுதான், இத்தகைய பாதிப்பு முதல்முறையாக அறியப்பட்டது.