Breaking News

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முப்பது பேர் ஐக்கிய தேசியக் கட்சியில் - மஹிந்தவுக்கு எதிரான பலமான முன்னணி ?

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் முப்பது பேர் அளவிலானோர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானைச் சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக பிரஜைகள் சக்தி அமைப்பின் இணை ஏற்பாட்டாளர் காமினி வியாங்கொட தெரிவித்தார். 


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களுள் துமிந்த திசாநாயக்க தவிர்ந்த ஏனைய உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணியின் கீழ் யானைச் சின்னத்தில் தேர்தலில் பேட்டியிட அதிக வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்தார். 


மஹிந்த ராஜபக்ஷவின் அணியினரைத் தோற்கடிப்பதற்கு அதி உச்ச நடவடிக்கைகளை மேற்கொள்ளப் போவதாகவும் வியாங்கொட தெரிவித்தார். 


ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, எம.கே.டி.எஸ்.குணவர்தன ஆகியோர் ஆரம்பத்திலிருந்தே ஐக்கிய தேசிய கட்சியுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


யாதிக ஹெல உறுமய மற்றும் சரத் பொன்சேகாவின் கட்சியும் இந்த முன்னணியுடன் இணைய அதிக வாய்ப்புள்ளதாகவும், இது சம்பந்தமாக பல பேச்சுவார்த்தைகள் வெள்ளிக்கிழமை (10) பல இடங்களில் நடைபெற்றதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 
நமது நிருபர்