Breaking News

மாகம்புர துறைமுக இரண்டாம் கட்டம் பூர்த்தி

மாகம்புர துறைமுக இரண்டாம் கட்டம் பூர்த்தி

மாகம்புர துறைமுக இரண்டாம் கட்ட நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்ததைத் தொடர்ந்து துறைமுகத்தினுள் நீர் நிரப்பும் நிகழ்வு அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தலைமையில் இன்று (11) இடம்பெற்றது.

84 ஏக்கர் விஸ்தீரணமுள்ள இப்பகுதியில் நீரை நிரப்புவதற்கு 50 நாட்கள் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

நீர் நிரப்பப்பட்டதன் பின்னர் 110 மீற்றர் தூரத்திற்கு மண் அகற்றப்பட்டு முதலாம் கட்டத்துடன் இணைக்கப்படும். 

இந்த நிர்மாணப்பணி பூர்த்தியடைந்ததும் இத் துறைமுகத்தினுள் வரக்கூடிய கப்பல்களின் எண்ணிக்கையின் அளவு அதிகரிக்கும் என இலங்கை துறைமுக அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு முதல் தடவை நீர் நிரப்பும் நிகழ்வு 2010ஆம் ஆண்டு நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 
நமது நிருபர்