Breaking News

மட்டக்களப்பு அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டு போட்டி ...

மட்டக்களப்பு   கல்வி வலயத்திற்குட்பட்ட அமிர்தகழி மெதடிஸ்த பாலர் பாடசாலையின்   வருடாந்த விளையாட்டு போட்டி இன்று பிற்பகல் 03.00 மணியளவில்  அதிபர் திருமதி . ஞானராஜன் தலைமையில்    பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது .ஆரம்ப நிகழ்வாக அதிதிகளுக்கு  மலர் மாலை அணிவித்து பேன்ட் வாத்திய இசைக்கப்பட்டு சிறார்களினால் அழைத்து வரப்பட்டன .  இந்நிகழ்வில்  அதிதிகளாக அமிர்தகழி மெதடிஸ்த ஆலய சேகர குரு அருட் .டேவிட் .என் .இராஜரட்ணம் ,  முன்பள்ளி வலயக்கல்வி அலுவலக உதவிக்கல்விப் பணிப்பாளர் எம் .புவிராஜ் ,கோட்டமுனை மெதடிஸ்த ஆலய சேகர முகாமைக்குரு .டி .சுகிர்தராஜா ஆகியோர் கலந்து கொண்டனர் .  ஆரம்ப நிகழ்வாக பாடசாலை கொடி மற்று  தேசிய கொடிகள் ஏற்றப்பட்டு,   சிறார்களின் விளையாட்டு நிகழ்வுகள் ஆரம்பமானது. இடம்பெற்ற விளையாட்டு  போட்டி  நிகழ்வுகளில் சிறார்களின் வினோத விளையாட்டு நிகழ்சிகளும், பெற்றோர்களின் வினோத விளையாட்டு நிகழ்வுகளும் இடம்பெற்றதோடு நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற சிறார்களுக்கும், பெற்றோர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டது இவ்வருடத்திற்கான  இப் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி நிகழ்வுகள் யாவும் சிறப்பாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது .
\




(அமிர்தகழி நிருபர்)