மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டி ஒன்று தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.
மாமாங்கம் இரண்டாம் குறுக்கு வீதியில் உள்ள சு.பாலச்சந்திரன் என்பவரின் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியே இவ்வாறு தீயிட்டு எரிக்கப்பட்டுள்ளது.இச்சம்பவம் திங்கட்கிழமை அதிகாலை 01.30 மணியளவில் தீக்கிரையாக்கப்பட்டமை தொடர்பில் தம்மிடம் அதன் உரிமையாளர் முறைப்பாடு செய்துள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். வெளியில் வெளிச்சம் தெரிவதைக் கண்டு வந்துபார்த்தபோது, முச்சக்கரவண்டி எரிந்துகொண்டிருந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்தார். அத்துடன் முச்சக்கரவண்டி தானாக தீப்பற்றுவதற்கு சந்தர்ப்பம் இல்லை எனவும் வீட்டு உரிமையாளர் கூறினார். இந்தச் சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
(அமிர்தகழி நிருபர் )



