பேராசிரியர் கா .சிவத்தம்பி நினைவுப் மூன்றாவது பேருரை
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறையினருடன் இனைந்து அரங்க ஆய்வு கூட்டத்தினர் ஏற்பாடு செய்த “ஈழத்துக் கூத்துமரபின் மீள்கண்டுபிடிப்பிலும் புத்துருவாக்கத்திலும்” எனும் தலைப்பில் பேராசிரியர் கா .சிவத்தம்பி நினைவுப் மூன்றாவது பேருரை இன்று இடம்பெற்றது .
மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக நடன நாடகத்துறையினருடன் இனைந்து அரங்க ஆய்வு கூட்டத்தினர் ஏற்பாடு செய்த “ஈழத்துக் கூத்துமரபின் மீல்கண்டுபிடிப்பிலும் புத்துருவாக்கத்திலும்” எனும் தலைப்பில் பேராசிரியர் கா .சிவத்தம்பி நினைவுப் பேருரை 03 ,பேராசிரியர் சி .மௌனகுரு தலைமையில் இன்று பிற்பகல் மட்டக்களப்பு கல்லடி சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக இராசதுரை மண்டபத்தில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பேராசிரியர் அம்மன் கிளி முருகதாஸ் ,நடன நாடகத்துறை இணைப்பாளர் கலாநிதி ஜெயரஞ்சனி ஞானராஸ் ,பேராசிரியர் சித்திரலேகா மெனகுரு மற்றும் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் ,பேராசிரியர்கள் ,உதவிப்பணிப்பாளர் ,விரிவுரையாளர்கள் சுவாமி விபுலானந்த அழகியல் கற்கைகள் நிறுவக மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .
(அமிர்தகழி நிருபர் ).





