சந்திரிக்கா முன்னேஸ்வரம் சென்றார் - அரசியல் கேள்விகளுக்கு விடை கூற மறுப்பு
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நேற்றைய தினம் (04) சிலாபத்திலுள்ள முன்னேஸ்வரம் கோயிலுக்கு லிஜயம் செய்து விஷேட பூசையில் கலந்துகொண்டார்; அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்த விஷேட பூசை ஒழுங்கு செய்யப்பட்டதாகத் தெரியவருகிறது. அரசியல் தொடர்பாக அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விடையளிக்கவில்லை. ஊடகவியலாளர்கள் இரு முக்கியமான கேள்விகளை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிடம் கேட்டனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு வேட்புரிமை வழங்கப்பட்டமையினை அங்கீகரிக்கின்றீர்களா? என்பது முதலாவது கேள்வி. இரண்டாவது கேள்வியாக அப்படி அவர் தேர்தலில் போட்டியிட்டால் அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதிக்கான வரப்பிரசாதங்கள் இல்லாமலாக்கப்படுமா? இவை இரண்டு கேள்விகளுக்கும் அவரிடமிருந்து கிடைத்த பதில் 'இது அரசியல் பேசும் இடமல்ல' என்பதாகும்.
நமது நிருபர்



