Breaking News

முன்னாள் ரூபவாஹினி தலைவரின் வழக்கு ஒக்டோபரில் விசாரணை


ஸ்ரீலங்கா ரூபவாஹினி கூட்டுத்தாபத்தின் முன்னாள் தலைவர் கலாநிதி ஆரியரத்ன அதுல்கல உள்ளிட்ட மூவரை அச்சுறுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு ஒக்டோபர் மாதம் ஒன்பதாம் திகதி ஒவரை ஒத்தி வைப்பதற்கு கொழும்பு பிரதான நிதவான் கிஹான் பிலபிடிய உத்தரவிட்டுள்ளார். 

2010ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28ஆந் திகதி அவரையும், முன்னாள் பிரதிப் பணிப்பாளர் சிரில் தேவபிரிய அபேசிங்க சாரதி மற்றும் கால்லகே தொன் ஹேமபால ஆகியோரையும் அச்சுறுத்தியதாக தொழிற்சங்க பிரதிநிதிகளான காஞ்சன மாரசிங்க, ஹியுபட் குமார அழகியவன்ன, காமினி புஷ்பகுமார மற்றும் ரவி அபேவிக்ரம ஆகியோருக்கு எதிராக இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.   

தேர்தல் காலத்தின்போது அவர்கள் உச்ச நீதிமன்ற கட்டளையை மீறி தொலைக்காட்சியில் அரசாங்கத் தரப்பினை மாத்திரம் விளம்பரப்படுத்தியதாக தொழிற்சங்க செயற்பட்டாளர்கள் அவருக்கெதிராக குற்றம் சுமத்தியிருந்தனர். 

தன்னை அவர்கள் அச்சுறுத்தியதாக அதுல்கல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது   
நமது நிருபர்