Breaking News

பிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு

பிரபல ஆடைக்கடைக்குள் செக்ஸ் :வீடியோ வெளியானதால் பரபரப்பு 
சீனா­வி­லுள்ள பிர­பல ஆடை விற்­பனை நிலை­ய­மொன்றில் வாடிக்­கை­யா­ளர்கள் ஆடை அளவு பார்க்கும் அறையில் ஆபா­சப்­பட வீடியோ பதி­வு­செய்­யப்­பட்டு இணை­யத்தில் வெளி­யி­டப்­பட்­டமை பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.  சீனத் தலை­நகர் பெய்­ஜிங்­கி­லுள்ள யுனிக்கோ எனும் ஆடை விற்­பனை நிலை­யத்தின் அறையில், இளம் ஜோடி­யொன்று நிர்­வாண கோலத்தில் பாலியல் உறவில் ஈடு­பட்ட காட்சி மேற்­படி வீடி­யோவில் பதி­வா­கி­யுள்­ளது.  சீனாவின் சமூக வலைத்­த­ளங்­க­ளிலும் இந்த வீடியோ வெளி­யி­டப்­பட்டு பெரும் எண்­ணிக்­கை­யா­னோரால் பார்­வை­யி­டப்­பட்டு, பகி­ரப்­பட்­டமை சர்ச்­சையை ஏற்­ப­டுத்­தி­யது.  பேஸ்புக், டுவிட்டர் போன்ற மேற்­கு­லக சமூ­க­வ­லைத்­த­ளங்­களை சீனாவில் பொது­மக்கள் பயன்­ப­டுத்த முடி­யாது. அந்­நாட்டில் பயன்­ப­டுத்­தப்­படும் சமூக வலைத்­த­ளங்­க­ளி­லேயே இந்த வீடியோ பகி­ரப்­பட்­டுள்­ளமை குறிப்­பி­டத்தக்கது. ஆடை மாற்றும் அறையில் வேண்­டு­மென்றே பாலி யல் வீடியோ உரு­வாக்­கப்­பட்டு அதி­க­மாக பகி­ரப்­பட்­ட­மை­யா­னது சோசலிச பெறு­மா­னங்­க­ளுக்கு எதி­ரா­னது என சீன அதி­கா­ரிகள் விமர்­சித்­துள்­ளனர்.  சீனாவின் இணைய நிர்­வா­கத்­துறை அதி­கா­ரிகள், அந்­நாட்டின் பிர­தான சமூக வலைத்­தள சேவை வழங்­குனர் நிறு­வ­னங்­களின் உயர் அதி­கா­ரி­களை  அழைத்து இவ்­வி­டயம் குறித்து கலந்­து­ரை­யா­டி­யுள்­ளனர்.  இதே­வேளை, சந்­தைப்­ப­டுத்தல் பிர­சார நோக்­கங்­க­ளுக்­காக இந்த வீடியோ பதி­வு­செய்­யப்­பட்டு வெளி­யி­டப்­பட்­ட­தாக சுமத்­தப்­படும் குற்­றச்­சாட்­டு­களை யுனிக்கோ நிறு­வனம் மறுத்­துள்­ளது. ஒரு பொறுப்புள்ள சர்வதேச வர்த்தக நாமம் என்ற வகையில் சமூக ஒழுக்க விழுமியங்களை மதித்து செயற்பட வேண்டுமென நாம்  எமது வாடிக்கையாளர்களிடம் கோருகிறோம்" என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.