Breaking News

வீரவன்சவுக்கு போலி இராணுவ இலக்கத்தகடால் விமல் நெருக்கடி

போலியான இராணுவ வாகன இலக்கத்தின் கீழ் வாகனம் ஒன்றில் தேர்தல் சுவரொட்டிகளை எடுத்துச்சென்றமை தொடர்பில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் நண்பரான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் வீரக்குமார திஸாநாயக்க தொடர்ந்தும் விசாரணை செய்யப்படுகிறார். இவர் அநுரதபுர மாவட்டத்தில் போட்டியிடுகிறார். இந்தநிலையில் வேட்பாளரின் அனுமதியுடனேயே இந்த வாகன போலி இலக்கம் பயன்படுத்தப்பட்டதா? என்பதை கண்டறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இராணுவ தலைமையத்துக்கு சொந்தமான வெள்ளை வேன் தொடர்பில் விமல் வீரவன்ச அறிக்கை ஒன்றை வெளியிட்ட இரண்டு நாட்களுக்குள் அவரின் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த வாகனத்துடன் சம்பந்தப்பட்டிருப்பது விமல் வீரவன்சவுக்கு பாரிய நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.