Breaking News

பாகிஸ்தானில் அடக்கம் செய்யப்பட்ட சிறுவனின் உடலத்தை சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் தின்ற சகோதரர்கள்‬

இதுவரை நூறுக்கும் அதிகமான சடலங்களை சமாதியிலிருந்து திருடி நரமாமிசம் உண்டதாக பாகிஸ்தானில்  இருவர் கைது செய்யப் பட்டுள்ளனர். பாகிஸ்தான் மாநிலம் பஞ்சாப் மாகாணத்தில் பாக்கர் மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஆரிப் அலி (வயது 35). இவர் ஏற்கவவே நரமாமிசம் சாப்பிட்டதாக சகோதரருடன் கைது செய்யப்பட்டவர். அப்போது சுமார் 100க்கும் அதிகமான சடலங்களை சமைத்துச் சாப்பிட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது.

அதனைத் தொடர்ந்து மூன்றாண்டுகள் சிறை தண்டனை பெற்ற அவர்கள் கடந்தாண்டு தான் விடுதலை செய்யப் பட்டனர். இந்நிலையில் கடந்த சில நாட்களாக ஆரிப் அலி வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தார் போலீசில் புகார் அளித்தனர். அதனைத் தொடர்ந்து ஆரிப் அலி வீட்டில் பஞ்சாப் போலீசார் நடத்திய சோதனையில் சிறு குழந்தையின் பிணம் ஒன்று அங்கு கண்டுபிடிக்கப் பட்டது. 

கால்பகுதி வெட்டப்பட்டு இருந்த அந்தச் சடலத்தின் தலை வீட்டின் வேறொரு பகுதியில் இருந்து மீட்கப்பட்டதைத் தொடர்ந்து பஞ்சாப் போலீசார் ஆரிப் அலியை கைது செய்தனர். ஆரிப் அலி இறந்த சிறு வயது குழந்தையை புதைத்த இடத்தில் இருந்து தோண்டி எடுத்து அதன் காலபகுதியை வெட்டி எடுத்து சமைத்து உண்டதாக போலீசார் அவன் மீது குற்றம் சாட்டி உள்ளனர். நரமாமிசம் உண்பவர்களுக்கு எதிராக பாகிஸ்தானில் நேரடிச் சட்டம் ஏதும் இல்லாத காரணத்தால், ஆரிப் அலி மீது சமாதியின் புனிதத்தை கெடுத்ததாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2013ம் ஆண்டு ஆரிப் அலி விடுதலையின் போது டார்யா ஹான் நகரில் போராட்டங்கள் வெடித்தது குறிப்பிட தக்கது.