Breaking News

நயன்தாராவும் நேசமான 5 பேய்களும்...

தமிழ் சினிமாவில் இது பேய்களின் காலமாகி விட்டது. ஒரு பேய் படம் வெற்றி பெற்றுவிட்டால் அதே பாணியில் பேயை களமிறக்கி படமெடுக்கின்றனர். பல பேய் படங்கள் வெற்றி பெற்றாலும் சரியான கதையம்சம் இல்லாத பேய் படங்கள் தோல்வியை தழுவுகின்றன. இருந்தாலும் கோலிவுட்டில் பேய் படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.

நயன்தாரா நடித்த மாயா வெற்றி பெற்றது. அதே நேரத்தில் சூர்யா உடன் மாசு என்கிற மாசிலாமணி படம் அந்த அளவிற்கு ரசிகர்களை சென்றடைய வில்லை. மாயா படத்தின் பாணியில் மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க நயன்தாரா ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா நடித்த மாயா என்ற பேய் படம் வெற்றியடைந்தது. தெலுங்கில் மயூரி என்ற பெயரில் மொழிமாற்றம் செய்து வெளியிடப்பட்டது.