தொழில் முயற்சி அபிவிருத்தி திட்டத்திற்கான கலந்துரையாடல் மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபையின் தொழில் முயற்சி அபிவிருத்தி திட்டத்திற்கான கலந்துரையாடல் இன்று ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது .
மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான பிராந்திய வியாபார மன்றம் அமைத்தல் மற்றும் தொழில் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு ஆரையம்பதி மண்முனை பற்று பிரதேச செயலாளர் வி . வாசுதேவன் தலைமையில் இன்று மண்முனை பற்று பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது .
இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் உரையாற்றிய பிரதேச செயலாளர் தெரிவிக்கையில் தேசிய தொழில் முயற்சி அபிவிருத்தி அதிகாரசபை நாடளாவியல் ரீதியில் தொழில் முயற்சி மன்றங்களை உருவாக்கி அதன் ஊடாக தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்து அவர்களின் வருமான மட்டத்தை அதிகரித்து அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .
அந்த வகையிலே மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கைத்தொழில் முயற்சியாளர்களுக்கான மன்றத்தினை உருவாக்குவதற்கான சம்பந்த பட்ட அதிகாரிகளுடனான கலந்துரையாடல் இன்று இடம்பெற்றதாக தெரிவித்தார் .
இன்று இடம்பெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் மண்முனை பற்று பிரதேச செயலக தேசிய தொழில் முயற்சி அதிகாரசபை உத்தியோகத்தர் செல்வி . டி .ரஞ்சனி , மண்முனை பற்று உதவி பிரதேச செயலாளர் திருமதி எல் . பிரசாந்தன் , மண்முனை பற்று பிரதி திட்டப்பணிப்பாளர் திருமதி . ஆர் .லதாகரன் , தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எ .பி . வேதகேதர , காத்தான்குடி பொலிஸ் நிலைய மக்கள் தொடர்பாடல் பொறுப்பதிகாரி எஸ் . செல்வராஜா மண்முனை பற்று பிரதேச செயலக சுற்றாடல் உத்தியோகத்தர் , கைத்தொழில் வர்த்தக சம்மேளன அங்கத்தவர்கள் , பொது சுகாதார பரிசோதக உத்தியோகத்தர் , மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பெண்கள் அமைப்புக்களின் அங்கத்தவர்கள் மற்றும் தொழில் முயற்சியாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர் .






