நிலவும் குளிர் காலநிலையால் நுவரெலியாவின் இயல்பு நிலை பாதிப்பு !
தற்போது நிலவும் குளிரான காலநிலை நுவரெலியாவில் பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அங்கு அதிகாலையில் நிலவுகின்ற கடும் குளிரான ஒரு காலநிலையினால், அதிகமான பிரதேசங்கள் பனி மூட்டடம் சூழ்ந்துள்ளமையால் வாகன சாரதிகளும் நோயாளர்கள் உட்பட பொதுமக்களும், பல சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கன்றனர்.