Breaking News

ரவுடித்தனம் செய்யும் மாணவர்கள் சிறைவாசம் அனுபவிக்க நேரிடும்

மாணவர்கள் தெருச் சண்டைகளிலும் ரவுடித்தனத்திலும் ஈடுபடுவார்களேயானால் சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடுவதோடு, அவர்களின் உயர்கல்வியை தொடர்வதற்கும் சந்தர்ப்பம் அற்று போகுமென, யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி எம்.இளஞ்செழியன் எச்சரித்துள்ளார்.

மேலும் தனிமனித நலனைவிட சமூகத்தின் நலனே நீதிமன்றத்திற்கு முக்கியமென தெரிவித்த அவர், குற்றச்செயல்களில் ஈடுபடும் மாணவர்களின் மேல், எதுவித பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கநேரிடுமெனவும் அவ்வாறான செயற்பாடுகளின் ஈடுபடும் மாணவர்கள் தொடர்பில் பெற்றோரும் ஆசிரியரும் மிகுந்த கவனம் செலுத்தவேண்டுமெனவும் தெரிவித்தார்.