Breaking News

35 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் உயர்தர மாணவன் உள்ளிட்ட 4 பேர் கைது

களுத்துறை பிரதேசத்தில் பெருமளவில் கேரள கஞ்சா விற்பனையை மேற்கொண்ட 4 சந்தேகநபர்களை இன்று பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கைதானவர்களிடமிருந்து சுமார் 8kg நிறையுடைய, 35 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டதாகவும்,  கைதானவர்களில்  பெண் மற்றும்  உயர்தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவன் ஒருவறும் அடங்குவதாக காவல்துறையினர்  தெரிவித்துள்ளனர்.