AHTIC மாநாட்டுக்கான உத்தியோகபூர்வ இணையத்தளம் ஜனாதிபதியால் அங்குரார்ப்பணம் செய்து வைப்பு
எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி தொடக்கம் 29ஆம் திகதி வரை கொழும்பில் நடைபெறவுள்ள ‘ஆசிய ஹோட்டல் மற்றும் சுற்றுலாத்துறை மாநாட்டுக்கான (AHTIC மாநாடு) உத்தியோகபூர்வ இணையதளம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நேற்று (05) அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.
இதேவேளை, இம்மாநாட்டுக்கான ஆரம்ப நிகழ்வுகள் கடந்த ஏப்ரல் மாதம் நடுப்பகுதியில் டுபாயில் நடைபெற்றிருந்தது. இந்நிகழ்வுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதம அதிதியாகவும், இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் சிறப்பதிதியாகவும் அழைக்கப்பட்டிருந்தமைக் குறிப்பிடத்தக்கது.