இலங்கை-இங்கிலாந்து 20 ஓவர் கொண்ட போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய . 3 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கிலும், ஒருநாள் போட்டி தொடரை 3-0 என்ற கணக்கிலும் இங்கிலாந்து கைப்பற்றியது.
இரு அணி மோதிய ஒரே ஒரு 20 ஒவர் போட்டி நேற்று சவுத்தமடனில் நடந்தது. டாஸ் ஜெயித்த இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இலங்கைக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன.
இலங்கை அணி 20 ஓவரில் 140 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. குணதிலகா 26 ரன்னும், சண்டிமால் 23 ரன்னும் எடுத்தனர். ஜோர்டான், டவ்சன் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
141 ரன் இலங்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் ராய் ரன் எடுக்காமலும், வின்சி 16 ரன்னிலும் அவுட் ஆனார்கள். அதன்பின் கேப்டன் மார்கன், ரோஸ் பட்லர் ஜோடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றது.
அந்த அணி 17.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 144 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்லர் 73 ரன்னும், மார்கன் 47 ரன்னும் எடுத்து அணியை வெற்றிபெற செய்தனர்