Breaking News

133 பொருட்களுக்கு VAT இல்லை ; அத்தியாவசிய பொருட்களின் நியம விலைகள், இரு வாரங்களுக்கு ஒருதடவை, ஊடகங்களில்

அத்தியாவசியப் பொருட்கள் உள்ளடங்களாக 133 பொருட்களுக்கும் மற்றும் 21 சேவைகளுக்கும் VAT(பெறுமதி சேர் வரி) விதிக்கப்படமாட்டாது என்று தெரிவித்த அரசாங்கம் தெரிவித்தபோதிலும், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் பெருமளவில் அதிகரிக்கப்படுவதற்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கென விசேட குழுவொன்றை நியமித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பாக ஊடகத்துறை அமைச்சரும், அமைச்சரவை பேச்சாளருமான கயந்த கருணாதிலக்க  தெரிவிக்கையில், 'அத்தியாவசியப் பொருட்களில் பலவற்றின் விலைகள் அசாதாரண முறையில் அதிகரிப்பது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கென ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் அமைச்சரவை குழுவொன்று நியமிக்கபடவுள்ளதாகவும் மேலும் அத்தியாவசிய பொருட்களின் நியம விலைகள், இரு வாரங்களுக்கு ஒருதடவை, ஊடகங்களில் விளம்பரம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.