Breaking News

வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லதுன்னு தெரியும்.. ஆனா எவ்வாறு குடிப்பது நல்லதுன்னு தெரியுமா?

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். மேலும் இப்பழக்கமானது ஜப்பானில் மிகவும் பிரபலமானது. ஜப்பானிய மக்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருப்பதன் ரகசியமும் இதுவே.

ஆனால் ஜப்பானிய மக்கள் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது மட்டுமின்றி, ஒருசில வழிமுறைகளைப் பின்பற்றுவார்கள்.

இதை ஒருவர் தினமும் பின்பற்றி வந்தால், அதனால் உடலில் உள்ள பிரச்சனைகள் குறிப்பிட்ட காலத்தில் சரியாகிவிடும்.

மேலும் ஆராய்ச்சியாளர்களும் வெறும் வயிற்றில் தினமும் தண்ணீர் குடித்தால், உடலில் ஏற்படும் பல பிரச்சனைகள் தடுக்கப்படுவதாக கூறுகின்றனர். சரி, இப்போது அந்த வழிமுறைகள் குறித்து விரிவாக காண்போம்.

காலையில் தூங்கி எழுந்ததும் முகத்தைக் கழுவி விட்டு, 4 டம்ளர் தண்ணீரைப் பருக வேண்டும். அதுவும் பற்களைத் துலக்கும் முன் குடிக்க வேண்டும்.

அதன் பின்பு பற்களைத் துலக்கவும். ஆனால் பற்களைத் துலக்கிய பின், 40-45 நிமிடத்திற்கு எதுவும் சாப்பிடக்கூடாது. அதற்கு பிறகு காலை உணவை உட்கொண்டு எப்போதும் போன்று இருக்கலாம்.

முக்கியமாக மூன்று வேளையும் உணவை உட்கொண்ட பின்னர் 2 மணிநேரத்திற்கு ஸ்நாக்ஸாக கூட எதையும் உட்கொள்ளக் கூடாது.

இந்த முறையைப் பின்பற்றும் முதல் நாளில் 4 டம்ளர் தண்ணீரைக் குடித்து ஆரம்பித்த பிறகு, ஒவ்வொரு நாளும் ஒரு டம்ளர் நீரை அதிகரிக்க வேண்டும்.

மேலே சொல்லப்பட்டுள்ளதை தினமும் பின்பற்றி வந்தால், உடலில் இதுவரை இருந்த பிரச்சனைகள் குறைந்து, உடலில் ஒரு நல்ல மாற்றத்தை உணர்வீர்கள்.

காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் தண்ணீர் குடித்து வந்தால், ஆஸ்துமா, சிறுநீரக நோய்கள், வயிற்றுப் போக்கு, நீரிழிவு, வாந்தி, தலைவலி, கண் நோய்கள், ஆர்த்ரிடிஸ், மாதவிடாய் கோளாறுகள், உடல் பருமன் போன்ற பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.

இந்த முறையை எந்த உடல்நல பிரச்சனை உள்ளவர்கள் எத்தனை நாட்கள் பின்பற்ற வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

வாய்வுத் தொல்லை - 10 நாட்கள்
மலச்சிக்கல் - 10 நாட்கள்
நீரிழிவு - 30 நாட்கள்
உயர் இரத்த அழுத்தம் - 30 நாட்கள்
காசநோய் - 90 நாட்கள்

ஆர்த்ரிடிஸ் பிரச்சனை உள்ளவர்கள், இந்த முறையை முதல் வாரம் 2 நாட்களும், பின் அடுத்த வாரத்தில் இருந்து தினமும் பின்பற்ற வேண்டும்.