22 நாள் சிசிக்சைகளின் பின்னர் இன்று வீடு திரும்பும் கமல் !

கடந்த மாதம் 13 ஆம் தேதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள இல்லத்தில் கமலஹாசன் கீழே விழுந்து பலத்த காயம் ஏற்பட்டது.
இதனையடுத்து சென்னை கிரீம்ஸ் சாலையில் அப்போலா மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முதுகு தண்டுவடம் மற்றும் காலில் அறுவைச் சிகிச்சை நடைபெற்றது.
தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வந்தார். அவரை காண அவரது ரசிகர்கள் வீட்டின் அருகே குவிந்து விடுவார்கள் என்பதால் இரவில் வீடு திரும்புவார் என கூறப்படுகிறது.
வீடுதிரும்பிய உடன் தொடர்ந்து ஒரு மாதம் ஓய்வு எடுக்க வேண்டும் மருத்துவர்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.


