Breaking News

வேற்று கிரகவாசியோவென மீனவர்களை நடுகடலில் அதிர்ச்சியில் உறையவைத்த....

மேற்கு அவுஸ்திரேலியாவில் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தண்ணீரில் மிகப் பெரிய பந்து போன்ற பொருள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். முதலில் படகு என்றும், பின்னர் மிகப் பெரிய வெப்பக் காற்று பலூன் என்றும் நினைத்தனர் அருகே நெருங்க நெருங்க வேற்றுக்கிரகப் பொருளாக இருக்கலாம் என்று ஆச்சரியத்தில் மூல்கினர், பின் அருகே சென்றவுடன் அது ஒரு இறந்த திமிங்கலம் என்பதை உணர்ந்தனர். 

அது குறித்து மீனவர் ஒருவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘திமிங்கலத்தின் வயிறு முழுவதும் வாயுவால் நிறைந்துள்ளது. அதனால் தான் அது பந்து போல் உப்பலாக இருந்தது. அருகே செல்லச் செல்ல அது ஒரு இறந்த திமிங்கிலம் என்று அதன் துர்நாற்றத்தை வைத்து உணர்ந்தோம்’ என்று தெரிவித்துள்ளார்.

இதுவரையில் இப்படி ஒரு சம்பவத்தைப் பார்த்ததே இல்லை என்று மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.