Breaking News

மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் பொருட்கள் ஏலத்தில் !!

மறைந்த குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலி பயன்படுத்திய பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.

குத்துச்சண்டை  ஜாம்பவனாக திகழ்ந்த முகமது அலி கடந்த சில மாதங்களுக்கு முன் மறைந்தார். இந்நிலையில் முகமது அலி பயன்படுத்திய பொருட்கள் மற்றும் அவர் வாங்கிய பட்டைகளை, ஆடைகள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பொருட்கள் ஏலம் விடப்பட உள்ளது.

இணைய தளம் மூலம் நடத்தப்படும் இந்த ஏலத்தின் மூலம் உலகம் முழுவதும் பரவியிருக்கும் முகமது அலியின் ரசிகர்கள் எளிதாக முகமது அலி பயன்படுத்திய பொருட்களை வாங்கலாம் என்றும் இதன் மூலம் பல லட்சம் அமெரிக்க டாலர்கள் திரட்டப்படும் என்றும் ஏல நிறுவன இயக்குநர் கேத்லீன் கஸ்மென் தெரிவித்துள்ளார்.