Breaking News

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி

வெஸ்ட் இண்டீசில் சுற்றுபயணம் செய்த இந்திய அணி 4 டெஸ்டுகள் கொண்ட தொடரை 2-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அமெரிக்காவில் நடந்த டி20 தொடரை 1-0 என்ற கணக்கில் இழந்தது.

இதனையடுத்து இந்திய அணி நியூலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. நியூலாந்து அணி அடுத்த மாதம் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இங்கு 3 டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது.

இந்தியா நியூலாந்து அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 22ம் தேதி கான்பூரில் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து கொல்கத்தா மற்றும் இந்தூரில் டெஸ்ட் போட்டிகள் நடக்கிறது. அக்டோபர் 12ம் தேதியுடன் டெஸ்ட் தொடர் நிறைவடைகிறது.

அதன்பிறகு 5 ஒரு நாள் போட்டிகள் அக்டோபர் 16ம் தேதி முதல் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்த போட்டிகள் முறையே தர்மசாலா, டெல்லி, மொகாலி, ராஞ்சி, விசாகப்பட்டிணம் ஆகிய இடங்களில் நடக்கிறது.