Breaking News

பைரவா படத்தில் விஜய் இரட்டைவேடத்தில் !

நடிகர் விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் பைரவா படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். தற்போது இந்த படத்தை பற்றிய ஸ்பெஷல் விஷயங்கள் இதோ.

பைரவா படம் கேரளாவில் நடந்த உண்மைச் சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமாம். இயக்குனர் எஸ்.ஏ.சியின் பரிந்துரையில் தான் பாப்ரி கோஷ் இந்த படத்தில் முக்கிய ரோலில் நடிக்கிறாராம்.

படத்தில் பேசும் வசனங்கள் அனைத்தும் பஞ்ச் டையலாக் போன்றே இருக்க வேண்டும் என விஜய் கூறியிருக்கிறாராம். இதனால் படத்தில் விஜய் பேசுகின்ற வசனங்களுக்கு மிக முக்கியதுவம் கொடுத்திருக்கிறார்கள்.

கிராமத்து இளைஞன், மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட் என இரண்டு கெட்டப்புகளில் விஜய் நடிக்கிறார். இந்த படத்தில் விஜய் சொந்தக் குரலில் ஒரு பாடல் பாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.