Breaking News

மன்னார் பலாகுலி பிரதேசத்தில் பகுதி நேர மத்ரசா ஆரம்பித்து வைப்பு-படங்கள்.

வடக்கு மாகாணத்தின் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார்,முல்லைத்தீவு உள்ளிட்ட மாவட்டங்களிலுள்ள பின்தங்கிய கிராமங்களில் பல்வேறு சமூக,ஆன்மிக அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டுவரும் உர்வதுல் உஸ்கா பௌவுண்டேஷனினால் மன்னார் மாவட்டத்தின் முசளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாகுலி பிரதேசத்தில் மத்ரசதுல் அலி அல்ஜஸ்ஸார் எனும் பெயரில் உலகக் கல்வியுடன் சேர்ந்ததான பகுதி நேர மத்ரசா ஒன்று அண்மையில் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

வறுமை கோட்டின் கீழ் வாழும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட மேற்படி மத்ரசாவை உர்வதுல் உஸ்கா பௌவுண்டேஷனின் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.எம்.ஏ.பர்ஹான்(பலாஹி) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார்.


இந் நிகழ்வில் பாடசாலை அதிபர் எம்.சாபி மரிக்கார் உட்பட ஊர் பிரமுகர்கள், உர்வதுல் உஸ்கா பௌவுண்டேஷனின் பிரதிநிதிகள்,பொது மக்கள்,மத்ரசா மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதே வேளை குறித்த உர்வதுல் உஸ்கா பௌவுண்டேஷனினால் மன்னார் மாவட்டத்தின் முசளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அரிப்பு பிரதேசத்தில் மேற்படி பவுண்டேஷனினால் கட்டிக் கொடுக்கப்பட்ட மஸ்ஜிதுல் ஹூமைதீன் பள்ளிவாயலுக்கு சுமார் ஒன்றரை இலட்சம் ரூபாய் பெறுமதியான ஒலி பெருக்கி சாதனங்கள்  உர்வதுல் உஸ்கா பௌவுண்டேஷனின் பணிப்பாளர் மௌலவி ஏ.எம்.எம்.ஏ.பர்ஹான்(பலாஹி)யினால் அண்மையில் மஸ்ஜிதுல் ஹூமைதீன் பள்ளிவாயல் தலைவர்,செயலாளர் ஆகியோரிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

(பழுலுல்லாஹ் பர்ஹான்)