Breaking News

பூமியின் சொர்க்கம் என்று கூறப்படும் ஒரு ஹோட்டல் எங்கே இருக்கிறது தெரியுமா..?

உலகில் மிக அதிக பணச் செலவில் கட்டப்பட்ட ஹோட்டல் வரிசையில் தற்போது இடம்பிடித்திருப்பது சிங்கப்பூரில் அமைந்துள்ள இந்த ஹோட்டல்..!

சில தினங்களுக்கு முன்னர் இந்த ஹோட்டல் திறந்துவைக்கப்பட்டது. சுமார் 650 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இந்த நீச்சல் குளம், ஒலிம்பிக் நீச்சல் குள தடாகத்தைவிட 3 மடங்கு பெரியது ..!

உலகிலேயே கட்டிடத்திற்குமேல், இவ்வாறானதொரு பெரிய நீச்சல் குளம் கட்டப்பட்டது இதுவே முதல் தடவையாகும். 55 மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் சுமார் 2,500 அறைகளைக் கொண்டதாகவும், சுமார் 350.00 ஸ்டேலிங் பவுண்களை அறை ஒன்றின் கட்டணமாக சொல்கிறார்கள்.

650 அடி உயரத்தில் அமைந்துள்ள நீச்சல் குளம்மே பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளதாகவும் சுமார் 70,000 பார்வையாளர்கள் இந்த ஹோட்டலை தினமும் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.

சுமார் 4 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஹோட்டல், ஆண்டுக்கு சுமார் 40 மில்லியன் டாலர்களை இலகுவாகச் சம்பாதிக்கும் என அதன் உரிமையாளர்கள்  கூறி அசத்துகிறார்கள்.