Breaking News

ஒரு நிமிடத்தில் 18 உடைகைளை மாறிய இரு பெண்களின் பிரம்மிப்பூட்டும் உலக சாதனை! வீடியோ இணைப்பு"

மலேசியா நாட்டைச் சேர்ந்த மயாஜாலம் காட்டும் பெண்கள் புதிய உலக சாதனை படைத்துள்ளனர்.

ஒரே நிமிடத்தில் அதிரடியாக 18 உடைகளை மாற்றி சாதனை படைத்துள்ளனர் . சீனாவின் ஹுபேய் மாகாணத்தில் உள்ள பொழுதுப்போக்குப் பூங்காவில் இந்த சாதனை நிகழ்ந்தப்பட்டுள்ளது. சீனாவில் ஒருவாரகால தேசிய விடுமுறை விரைவில் வரவுள்ள நிலையில், மக்களை மகிழ்விக்க பொழுதுப்போக்கு பூங்காக்கள் போட்டிப்போட்டு கொண்டு புதிய நிகழ்ச்சிகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அவ்வகையில், ஹுபேய் மாகாண தலைநகரான உஹான் நகரில் உள்ள ஹேப்பி வேல்லி பொழுதுப்போக்குப் பூங்காவில் ஒரு புதிய சிறப்பம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 

மேடையின் தோன்றும்போது அணிந்திருந்த கருப்புநிற உடையுடன் சேர்த்து மொத்தம் 19 உடைகளில் ஒரு பெண் தோன்ற, மற்றொரு பெண் ஒரு உறைபோன்ற திரையால் மறைத்தபடி, அடுத்தடுத்து உடைகளை மாற்றுவதில் அவருக்கு உதவி செய்கிறார். மலேசியாவை சேர்ந்த அவேரி சின் மற்றும் சில்வியா லிம் ஆகியோர் ஒரே நிமிடத்துக்குள் நடத்திகாட்டிய இந்த சாகச நிகழ்ச்சியின் மூலம் முன்னயை உலக சாதனை முறியடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.