Breaking News

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான முக்கிய சுவாரிஸ்யமான ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் அறிவிப்பு !!!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் தொடர்பான முக்கிய சுவாரிஸ்யமான ஆவணங்களை வெளியிடப்போவதாக விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜீலியன் அசான்ஞ் தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனம் கடந்த 2007ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமெரிக்காவின் உளவு வேலைகள், மற்றும் ரகசிய ஆவணங்களை வெளியிட்டு பிரபலம் அடைந்தது. 

அமெரிக்காவின் கைது முயற்சியில் தப்பிய அசான்ஞ் லண்டனில் உள்ள ஈகுவடார் நாட்டின் தூரகத்தில் 2012ம் ஆண்டு முதல் தங்கியுள்ளார் இந்நிலையில் ஈகுவடார் தூதரகத்திலிருந்து வெப் கேமரா மூலம் ஜூலியன் அசான்ஞ் அளித்த பேட்டியில், விக்கிலீக்ஸ் நிறுவனம் தனது 10வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. 

இதை முன்னிட்டு அமெரிக்க தேர்தல் தொடர்பான முக்கிய ஆவணங்களை அடுத்த 10 வாரங்களுக்கு வெளியிட இருக்கிறோம். இதில் சுவாரஸ்யமான பல முக்கிய தகவல்கள் வெளிவரும். ஹிலாரி கிளின்டன் செய்யும் மாய வேலைகளில் விக்கிலீக்ஸ் கவனம் செலுத்தி வருகிறது. அவரை தோலுரிக்க வேண்டிய நேரம் இது என குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக ரஷ்யா அளிக்கும் ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது