Breaking News

கபில்தேவின் 31 ஆண்டுகால சாதனையை முறையடித்தார் ஹெராத் !

ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை ஹராரேயில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 257 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டெஸ்டில் வெற்றி பெற்று இருந்ததால் 2-0 என்ற கணக்கில் தொடரை முழுமையாக வென்றது.

இந்த தொடரில் முழுமையாக அசத்தியவர் ஹெராத். மேலும் இந்த தொடருக்கு தலைமை பொறுப்பை ஏற்றவர். முதல் டெஸ்டில் 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஹெராத் இரண்டாவது டெஸ்டில் 13 விக்கெட்டுகளை அள்ளினார்.

2 டெஸ்டுகளிலும் சேர்த்து மொத்தம் 19 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார்.
கடந்த 1985ம் ஆண்டு இந்திய அணியின் கேப்டனாக இருந்த கபில்தேவ் அடிலெய்டில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 106 ரன்கள் விட்டு கொடுத்து 8 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார். ஒரு அணியின் கேப்டனாக கபில்தேவ் இந்த சாதனையை இதுவரை தக்க வைத்து இருந்தார்.

இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணியின் கேப்டனான ஹெராத் 63 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதன் மூலம் 31 ஆண்டு காலம் தக்க வைத்திருந்த கபில்தேவின் சாதனையை அவர் முறியடித்தார்.