Breaking News

அதிர்ச்சியை கொடுத்த நயன்தாரா !!?

நயன்தாரா நடிகைகளிலேயே ரொம்ப வேறுபட்டவர். ஒரு காதல் வந்துவிட்டது என்றால் கேரியரே போய்விடும் அளவுக்கு இருக்கும் சினிமாவில், மூன்று காதல்கள்…கேரியரில் பிரேக் என்று இருந்த நயன்தாரா …இன்றைக்கு எழுந்து நிமிர்ந்த கதையே…தனி எபிசோட்.

ஹீரோயின் ஓரியண்டட் படங்களை நயன் தேடுகிறார் என்றவுடன் ஏகப்பட்ட ஆபர்கள். அதில் ஹாரர் சப் ஜெக்ட் அதிகம். மாயா என்றொரு ஹாரர் பில்மில் நடித்தவர். மீண்டும் ஒரு கதை என்னும்போது எல்லாவற்றின் கதையையும் யோசித்து எடுத்த கமிட்மென்ட் தான் டோரா.

டோராவில் வித்தியாசமான ட்ரீட்மெண்ட் ஹாரர் படம் என்று சொல்லும் நயன் , இந்த படத்தின் கதையை இப்படத்தின் இயக்குனர் தாஸ் ராமசாமி சொன்னபோதே ஒத்துக்கொண்டாராம்.

இந்த படத்தில் ஒரு கார் முக்கிய ரோலில் உள்ளதாம். அடுத்த ஆண்டு துவக்கத்தில் வெளியாக உள்ள இந்த படத்தின் டப்பிங்கை ஒரே நாளில் முடித்து கொடுத்து அதிர்ச்சியை தந்தாராம் நயன். அவ்வளவு தேர்ந்த நடிகையாகி விட்டார் நயன் என்று சொல்லுகிறார்கள்.