சாய்ந்தமருதில் இடம்பெற்ற விபத்தில் மூன்று சிறார்கள் ஸ்தலத்தில் மரணம் 10 பேர் காயம் !!!
இன்று திங்கட்கிழமை அதிகாலை 5.30 மணியளவில் கல்முனை - சாய்ந்தமருது பிரதான வீதியில் இடம்பெற்ற கோரமான வீதி விபத்தில் 3 சிறார்கள் ஸ்தலத்தில் உயிரிழந்ததுடன், 10 பேர் காயமடைந்துள்ளதுடன் இவர்களில் ஒருவர் கையொன்றினை இழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது குறித்த விபத்தானது வானும் இ.போ.ச பஸ்ஸும் மோதிதாலே சம்பவித்துள்ளது. இந்த விபத்துத் தொடர்பில் குறித்த பஸ்ஸின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்